நகர் புறத்தில் அட்டகாசம் செய்து வரும் சிங்கவால் குரங்கை நாய் விரட்டி சென்று சண்டை போட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை வனப்பகுதியில் குரங்கு, காட்டெருமை, சிறுத்தை, கரடி, யானை போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. மேலும் இந்த வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்நிலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் அழிந்து வரக்கூடிய விலங்குகளின் பட்டியலில் இருக்கும் அரிய வகை சிங்கவால் குரங்குகளை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். தற்போது சிங்கவால் குரங்குகள் வால்பாறையில் அருகில் இருக்கும் நகர் பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
இந்த குரங்குகள் வால்பாறை பகுதியில் இருக்கும் கடைகள் மற்றும் வீடுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை எடுத்துச் செல்வதோடு, அதனை விரட்ட வரும் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. இந்நிலையில் இப்பகுதியில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் வளாகத்திற்குள் இந்த குரங்கு புகுந்து அட்டகாசம் செய்ததை அங்கிருந்த ஒரு நாய் பார்த்துள்ளது. அதன் பின் நாய் சிங்கவால் குரங்கை துரத்திச் சென்று குரைத்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.