குக் வித் கோமாளி ஷகிலா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ஷகிலா துணை நடிகையாக அறிமுகமானவர். இதையடுத்து இவர் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை ஷகிலா போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். இந்நிலையில் நடிகை ஷகிலா தனது மகள் மிளாவுடன் இணைந்து போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கருப்பு நிற உடையில் இருவரும் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது. நடிகை சகிலா மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.