தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில் சாலை போடும்போது மேல்தள கட்டுமானத்தை முழுவதுமாக சுரண்டி எடுத்து விட்டு அதே அளவிற்கு மேல் தளம் போட வேண்டும் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “எந்த சூழ்நிலையிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சாலைகளில் மட்டத்தை அதிகரிக்கவே கூடாது. மேற்பரப்பை சுரண்டி விட்டு சாலை போடுவதால் வீடுகளுக்குள் நீர் புகுந்து விடாமல் தடுக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.