Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சொன்னால் கேட்க மாட்டிங்களா…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை …. கட்டுப்பாட்டை மீறுபவருக்கு எச்சரிக்கை….!!

ஆம்பூரில் ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்த 4 கடைகளை வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கின்றது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் பகுதியில் அரசு விதிமுறைகளை மீறி செருப்பு கடை மற்றும் சலூன் கடை உள்ளிட்ட நான்கு கடைகள் இயங்கி வந்திருக்கின்றது. இதனால் தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று அந்த கடைகளுக்கு  சீல் வைத்துள்ளனர்.

இதேபோன்று ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று பரவும் வகையில் சமூக இடைவெளி இன்றி, கூட்டம் அதிகமாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த மருத்துவமனையின் மீது ஆம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுபோன்று தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவோர் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |