Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன பண்றதுன்னு தெரியல… பெண் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளை கேட் பாலாஜி நகர் பகுதியில் லதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கணவனை இழந்து தனது இரண்டு மகன்களுடன் தனியாக வசித்துள்ளார். இந்நிலையில் வட்டிக்கு விடும் தொழில் செய்த லதா தான் வாங்கிய கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த லதா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து பதிவு செய்த காவல்துறையினர் லதா தற்கொலை செய்துகொள்வதற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என வேறு கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |