Categories
மாநில செய்திகள்

சிடி ஸ்கேன் கட்டணத்தை…. தமிழக அரசே நிர்ணயம் செய்ய கோரிக்கை…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு சில  மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனவை உறுதி செய்வதற்கான முக்கிய பரிசோதனையின் சிடி ஸ்கேன் ரூ.3500 க்கு எடுக்கப்பட்டது. இதையடுத்து தற்போது ரூ.5000 முதல் ரூ.6000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆர்டிபிசிஆர் சோதனைக்கு ரூ.1200 தான் கட்டணம் என தமிழக அரசு நிர்ணயித்தது போல சிடி ஸ்கேனுக்கான கட்டணமும் தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |