Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அது இருந்தால்தான் கிடைக்கும்… அலைமோதிய மக்கள் கூட்டம்… காவல்துறையினரின் நடவடிக்கை…!!

நிவாரணம் தொகையை பெறுவதற்காக புதிதாக குடும்ப அட்டை வாங்க பொதுமக்கள் அலை மோதியதால் குன்றத்தூர் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் புதிய ஐந்து திட்டங்களை வெளியிட்டுள்ளார். அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2000 ரூபாய் முதற்கட்டமாக வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அந்தத் திட்டத்தின் படி குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து குன்றத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் புதியதாக குடும்ப அட்டை பதிவு செய்தவர்கள் அதனை வாங்குவதற்காக தாலுகா அலுவலகத்திற்கு முன்பு கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு போதிய ஊழியர்கள் இல்லாத காரணத்தினால் பொதுமக்களை ஒருவர் பின் ஒருவராக அழைத்து சற்று தாமதமாக குடும்ப அட்டைகளை வழங்கியுள்ளனர். அதன் பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கூட்டமாக இருந்த பொதுமக்களை சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து குடும்ப அட்டையை வாங்க செய்தனர்.

Categories

Tech |