Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : நவோமி ஒசாகா ,செரீனா அதிர்ச்சி தோல்வி ….!!!

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், நவோமி ஒசாகா மற்றும் செரீனா இருவரும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர் .

ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்று வரும், போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுக்கான 2-வது சுற்றில், நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச், அமெரிக்க வீரரான டெய்லர் பிரைட்சுடன் மோதி, 6-3, 7-6 (7-5)  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று , 3வது சுற்றுக்கு முன்னேறினார். இதுபோல் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான டொமினிக் திம், ஹங்கேரி வீரரான மார்டோன் புக்சோவிக்சை எதிர்கொண்டு ,3-6, 7-6 (7-5), 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதைத்தொடர்ந்து பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள நவமி ஒசாகா ,அமெரிக்க வீராங்கனையான ஜெஸ்சிகா பெகுலாவுடன் மோதி , 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதேபோல் மற்றொரு ஆட்டத்தில் 4 முறை சாம்பியனும் ,நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்சும், அர்ஜென்டினா வீராங்கனையான நடியா போடோரோஸ்கா உடன் மோதி, 7-6 (8-6), 7-5 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார். இந்தப் போட்டியானது 39 வயதான செரீனாவுக்கு ,ஆயிரமாவது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே சமயத்தில் 2வது சுற்றில் பங்குபெற்ற  நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி, ஷிவ்டோவாவுடன் மோதி, 6-4, 6-1  என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றியை கைப்பற்றினார். இதேபோல் மற்றொரு போட்டியில்  எலினா ஸ்விடோலினா ,அமெரிக்க வீராங்கனை அனிசிமோவாவுடன் மோதி, 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அதோடு கரோலினா பிளிஸ்கோவா ,முகுருஜா , சபலென்கா , ஆஸ்டாபென்கோ மற்றும்  கோகோ காப் , ஸ்வியாடெக் ஆகிய வீராங்கனைகள்  தங்களின்  2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.

Categories

Tech |