Categories
மாநில செய்திகள்

மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடி…. தமிழகம் 2 நெருக்கடியை சந்திக்கிறது – முதல்வர் ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பாக ரூ.1 கோடி நிதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின், கொரோனா தொற்றை சமாளிக்க அரசு முயற்சித்து வருகிறது. மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடி என 2 நெருக்கடியை தமிழகம் தற்போது எதிர்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |