தாழ்வாக இருக்கும் மின்கம்பிகளை சரிசெய்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருளம்பாடி கிராமத்திலிருந்து வடபொன்பரப்பி செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றது. இந்நிலையில் பலத்த காற்று வீசும் போது இந்த மின்கம்பிகள் ஒன்றோடொன்று உரசுவதால் ஏற்படும் தீப்பொறிகளால் தீவிபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுயுள்ளது. இதனால் பாதசாரிகள்,வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும் இவ்வாறு மின்கம்பிகலிருந்து வெளிவரும் தீப்பொறிகளால் அதன் அருகில் இருக்கும் கரும்பு வயல்கள் அவ்வப்போது தீப்பிடித்து எரிகின்றது. இந்நிலையில் பெரும் விபத்து ஏற்படாமல் தவிர்ப்பதற்காக சிலர் மின்கம்பிகளோடு மரக் குச்சிகளை சேர்த்து கட்டிவைத்துள்ளனர். எனினும் சிலசமயங்களில் அப்பகுதியில் வீசும் பலத்த காற்றினால் கட்டப்பட்டுள்ள மரக்குச்சிகள் சரிந்து கீழே விழுந்து விடுகின்றன. எனவே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தாழ்வாக செல்லும் அந்த மின்கம்பிகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.