Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படியெல்லாம் இருக்க கூடாது…. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தனும்… கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்..!!

சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறி வெளியில் சுற்றித்திரிவதால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து தொற்று பரவுவதை கட்டுப்படுத்த தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பால், மருந்து கடைகள் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் டீக்கடை, மளிகை கடை மற்றும் இறைச்சி கடைகள் மதியம் 12 வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கை மதிக்காமல் வாகன ஓட்டிகள் மதியம் 12 மணிக்கு பிறகும் தேவையின்றி சுற்றித் திரிகிறார்கள். இதனால் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும்மென சமூக ஆர்வலர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |