குக் வித் கோமாளி நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தொலைக்காட்சிகளில் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இதை தொடர்ந்து இந்நிகழ்ச்சி முடிவடைந்ததை பல ரசிகர்களும் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர். அதுவும் தற்போது கொரோனா ஊரடங்கால் பலர் வீட்டில் இருந்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் பலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மிஸ் செய்து வருகின்றனர். ஆகையால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கடைசி எபிசோடை மீண்டும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.அதன்படி இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனின் இறுதிச் சுற்றை மீண்டும் வரும் சனிக்கிழமை மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த தகவல் குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.