சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் செவிலியர்கள் தின விழா நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் சமூக ஆர்வலர்கள் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இனிப்புகள் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டினர். இந்த கொரோனா காலகட்டத்திலும் பொதுமக்களுக்கு தன்னலமற்ற சேவையால் மனப்பான்மையுடன் பணியாற்றும் செவிலியர்களுக்கு சால்வை அணிவித்து இளையான்குடி தன்னார்வலர் மாலிக் கௌரவபடுத்தியுள்ளார்.
மேலும் செவிலியர் தினத்தையொட்டி அவர்களுடைய தன்னலமற்ற சேவையை இனிப்புகள் வழங்கி பாராட்டினர். அதனை தொடர்ந்து இந்த கொரோனா காலகட்டத்திலும் பொதுமக்களுக்காக சேவை புரியும் செவிலியர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் என்று தன்னார்வலர்கள் பாராட்டியுள்ளனர்.