Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆட்கள் நடமாட்டமே இல்லை… அரசின் கட்டுப்பாடு நடவடிக்கை… வெறிச்சோடிய சுற்றுலாத்தலங்கள்….!!

கொரோனா பரவல் காரணமாக சுற்றலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டதால் அப்பகுதிகள் வெறிசோடிய நிலையில் உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலை பகுதி அடர்ந்து காணப்படுகின்றது. இந்நிலையில் பொதுமக்களின் சுற்றுலா தலமாக காணப்படும் இந்த இடத்தில் 5 ற்கும் மேற்பட்ட நீர்விழ்ச்சிகள் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரி செய்வதற்காக வெள்ளிமலை சாலை பகுதியில் படகு குழாமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோடைக்காலம் காரணத்தால் கல்வராயன் மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் வறண்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் நீர்வீழ்ச்சிகளில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அனைவரும் ஏமாற்றத்துடன் இருந்த நிலையில் இந்தப் படகு சவாரி அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது. இதனை அடுத்து  கொரோனா தொற்று பரவல் காரணத்தால் அதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் கல்வராயன் மலைக்கு சுற்றலா பயணிகள் வராததால் படகு சவாரி இன்றி  அப்பகுதி வெறிசோடி காணப்பட்டுள்ளது.

 

Categories

Tech |