கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட பத்மபிரியா, அக்கட்சியில் இருந்து விலகுவதாக தெறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. மதுரவாயல் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் களமிறங்கிய இளம்பெண் பத்மப்ரியா, தனது முதல் தேர்தலிலேயே 33401 வாக்குகளை பெற்று, அந்த தொகுதியில் மூன்றாம் இடத்தையும் அவர் பிடித்திருந்தார். இதனால், அக்கட்சியின் முக்கியத்துவம் வாய்ந்த ஒருவராக அவர் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மக்கள் நீதி மைய்யம் கட்சியில் இருந்து தான் விலகுவதாக ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்த தனது பதிவில், ‘சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்’ என குறிப்பிட்டுள்ளார். அவரைத்தொடர்ந்து முன்னாள் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சந்தோஷ் பாபு-வும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
Dear friends, Good afternoon! It’s with a heavy heart that I am informing you that I am resigning my post and membership from Makkal Needhi Maiam. My decision is due to personal reasons. I thank Kamal Sir and our team for their affection and friendship.
— Dr. Santhosh Babu IAS (@SanthoshBabuIAS) May 13, 2021