அரபிக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப் பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நீலகிரி, குமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் அரபிக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் இன்று பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.