மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் ஒரு வாலிபர் பலியான நிலையில், இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கவுண்டனூர் பகுதியில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சந்திரனும், அதே பகுதியில் வசிக்கும் மாதேஷ் மற்றும் வெங்கடேஷ் போன்றோர் மோட்டார் சைக்கிளில் மதக்கொண்டபள்ளி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து இவர்கள் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது அவ்வழியாக வேகமாக சென்ற சரக்கு வேன் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மாதேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் அக்கம்பக்கத்தினர் பலத்த காயமடைந்த வெங்கடேஷ் மற்றும் சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த தேன்கனிக்கோட்டை காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.