சேலம் மாவட்டத்தில் தடையை மீறி பூக்கடை திறந்து வியாபாரம் செய்த வியாபாரிகளிடம் காவல் துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு காய்கறி, இறைச்சி மளிகை, பூக்கடை மற்றும் பழக்கடைகள் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 12 மணிக்கு பிறகும் சேலம் மாவட்டத்திலுள்ள சின்னக்கடை வீதியில் தடையை மீறி சில வியாபாரிகள் பூக்கடையை திறந்து வியாபாரம் செய்துள்ளனர்.
மேலும் பூக்கடையில் பூக்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பூக்கடைகள் திறக்ககூடாது என்று வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர். இதனையடுத்து தடையை மீறி பூக்கள் வியாபாரம் செய்தால் வியாபாரிகளிடம் அபராதம் வசூலித்துள்ளனர்.