சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கோபசந்திரம் கிராமத்தில் மதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான மதன் அடிக்கடி குடித்துவிட்டு தனது வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து மதன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மதன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.