Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஐபில் போட்டிக்கு சப்போர்ட்டாக”….! “சொந்த நாட்டை எதிர்த்து பீட்டர்சன் போட்ட ட்விட்” ….!!!

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக, கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ள கருத்து,   சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

14 வது ஐபிஎல்  தொடர் கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இதனால் போட்டியில் பங்குபெற்ற வீரர்கள், அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனரான ஆஸ்லே கில்ஸ் கூறும்போது, இந்த ஆண்டு இங்கிலாந்து அணி சர்வதேச போட்டிகளில் விளையாட உள்ளதால், ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பங்குபெற்றுவதற்கான வாய்ப்பில்லை என்று  தெரிவித்துள்ளார். இந்த செய்தி வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் ,இதைபற்றி ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

அதில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ,ஐபிஎல் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் விளையாட உள்ளதை, எப்படி தடுக்கப் போகிறது என்பதை பார்ப்பதற்கு ஆவலுடன் இருப்பதாகவும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக ,நான் குரல் கொடுத்தபோது தனியாளாக இருந்ததாகவும், அவர் பதிவிட்டுள்ளார். தற்போது அணியில் சிறந்த வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டால் ஐபிஎல் போட்டியில் கண்டிப்பாக விளையாட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் விளையாட உள்ளதால், மீதமுள்ள ஐபிஎல் போட்டி நடத்துவதைப் பற்றி பிசிசிஐ இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

https://twitter.com/KP24/status/1392395680853991427

Categories

Tech |