Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இன்னும் அங்கதான் நிக்குது… முற்றுகையிட்ட காட்டு யானைகள்… வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

பத்துக்கும் மேற்பட்ட காட்டுயானைகள் தங்களது குட்டிகளுடன் குடியிருப்பு பகுதிகளை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்கோனா, திருவள்ளுவர் நகர், சேரங்கோடு அரசு தேயிலைத் தோட்டம் ரேஞ்ச் 2 போன்ற பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருவள்ளுவர் நகர் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன. இந்த காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியை முற்றுகையிட்டதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இது குறித்து உடனடியாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். ஆனாலும் அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் செல்லாமல் சோம்பு காட்டுக்குள் புகுந்து விட்டது. இதனால் வனத்துறையினர் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |