பட்டதாரி பெண் மாயமான வழக்கை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் நாகராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மகள் வினோதினி எம்.ஏ பட்டதாரி ஆவார். இவர் கடந்த 9ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது பெற்றோர் அவரை உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்காததால் வினோதினியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் மாயனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வினோதினி தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.