Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவங்களுக்கு என்னாச்சு…. செய்வதறியாது திணறிய சிறுவன்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மின்னல் தாக்கியதால் வாலிபர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிக்கலாங்குளம் கிராமத்தில் அழகு முருகராஜ் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகராஜ் அதே பகுதியில் உள்ள ராஜகோபால் என்ற 12 வயது சிறுவனுடன் தனது வீட்டு பக்கத்தில் இருக்கும் தோட்டத்திற்கு ஆடுகளுக்கு மரக்கிளைகளை பறிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அங்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் எதிர்பாராதவிதமாக அழகு முருகராஜ் மீது மின்னல் பயந்து விட்டது. இதனால் அழகு முருகராஜ் மயங்கி விழுந்தவுடன் என்ன செய்வது என்று தெரியாமல் சிறுவன் கதறி அழுது கொண்டிருந்தான்.

இதனைத் தொடர்ந்து மரக்கிளைகளை பறிப்பதற்காக சென்ற இருவர் வீட்டிற்கு திரும்ப வராததால் அழகுமுருகனின் தந்தை ஜெயச்சந்திரன் அந்த தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது தனது மகன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |