Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

எங்க இருந்தாலும் தப்பிக்க முடியாது… கரெக்டா கண்டுபிடிக்கும்… காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஊரடங்கு விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுகின்றனரா என்பதை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியானது துவங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அங்கு பொதுமக்கள் கூட்டமாக நிற்கின்றார்களா, விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கின்றனரா என்பதை ட்ரோன் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து உடன்குடி பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியை துவக்கி வைத்துள்ளார். அதன்பின் அவர் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கி உள்ளார்.

Categories

Tech |