Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்துகள்…. அரசு செம மாஸ் உத்தரவு…..!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்ட முதல் நாளே, முக்கியமான 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி ஆவின் பால் விலை 3 ரூபாய் குறைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்,ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி 4000 வழங்கப்படும் உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதனைத் தொடர்ந்து மக்களை கவரும் வகையில் பல்வேறு செயல்களை முதல்வர் செய்து வருகிறார். நேற்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் ஊக்கத்தொகை அறிவித்தார். தொடர்ந்து தனது முதல்வர் பதவியை வெற்றிகரமாக அவர் செய்து வருகின்றார். அதுமட்டுமன்றி கொரோனா காலத்தில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு ஆலோசனைகளையும் செய்து முக்கிய முடிவுகளை வெளியிட்டு வருகிறார்.

மத்திய அரசின் நிர்பயா திட்டத்தின் கீழ், பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். பேருந்து வழித் தடங்களை மக்கள் அறிந்துகொள்ள சலோ ஆப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும். மேலும் பெண்கள் கட்டணமின்றி செல்லக்கூடிய வகையில் நகர பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |