Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டுக்கோட்டை உதவி கலெக்டருக்கு கிடைத்த தகவல்…. விதியை மீறிய கடைகள்…. சீல் வைத்த அதிகாரிகள்….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த ஏழு கடைகளை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி மளிகை கடைகள், பேக்கரி கடை, காய்கறி கடை போன்றவைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என்றும் பால் கடைகள், மருந்து கடைகள், ஓட்டல்களில் குறிப்பிட்ட  நேரத்தில் உணவு பார்சல்கள் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் விதிகளை மீறி கடைகள் அதிக நேரம் திறந்து இருப்பதாக பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் பாலச்சந்தருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் பட்டுக்கோட்டை தாசில்தார் மற்றும் குழுவினர் இணைந்து நகர பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த நகைக்கடை, மர இழைப்பகம், சூப்பர் மார்க்கெட், அழகு நிலையம் போன்ற ஏழு நிறுவனங்களுக்கும் பூட்டு போட்டு சீல் வைத்துள்ளனர். இதனை துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன், யுவராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Categories

Tech |