திருநெல்வேலியில் கார்-பைக் மோதியதால் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 25 வயதாகின்ற சிதம்பர செல்வம் என்பவர் வசித்து வந்தார். மேலும் பத்தமடையில் முத்துகிருஷ்ணன் என்ற நபரும் வசித்து வருகிறார். இந்த 2 நபர்களும் கங்கைகொண்டானிலிருக்கும் சிப்காட்டில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் 2 பேரும் பணி நேரம் முடிந்த பின் மோட்டார் சைக்கிளில் தங்களுடைய ஊருக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து சிதம்பர செல்வம் மோட்டார் சைக்கிளை ஓட்டிய நிலையில் இருவரும் தருவை அருகே வந்து கொண்டிருக்கும்போது சற்றும் எதிர்பாராதவிதமாக காரின் மீது மோதியுள்ளார்கள்.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் காயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிதம்பரம் செல்வத்திற்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் முத்து கிருஷ்ணனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.