Categories
சினிமா தமிழ் சினிமா

‘இதயம் முரளி போல இருக்காதீங்க’… காதலை சொன்ன ரசிகர்… பிரியா பவானி சங்கரின் கியூட் பதில்…!!!

நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் பிரியா பவானி சங்கர். இதையடுத்து இவர் தமிழ் திரையுலகில் மேயாதமான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தினார். தற்போது பிரியா பவானி சங்கர் குருதி ஆட்டம், ஓமண பெண்ணே, பொம்மை, பத்து தல உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் மேயாத மான் படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஐந்து நொடிகளுக்கு ஒருமுறை பிரியா பவானி சங்கர் மீது காதலில் விழுவதாக குறிப்பிட்டு மேயாத மான் படத்தில் கையில் மைக்குடன் வைபவ் நிற்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர் ‘நீங்கள் என்னை டேக் செய்து காதலை சொல்ல வேண்டும். இதயம் முரளி போல இருக்க வேண்டாம். உங்கள் அன்புக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த க்யூட்டான பதிவு  இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |