Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க…. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனை அறிந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இது ஒரு பக்கமிருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு ஊசிகளை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.மேலும் கொரோணா பாதிப்பைக் கட்டுப்படுத்த தேவையான தடுப்பு ஊசிகளையும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன.

அதனால் இதனை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பு ஊசி, மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்க வேண்டிய அரிசி மானிய தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி உள்ளார்.

Categories

Tech |