செவிலியர் தினத்தை முன்னிட்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவ படத்திற்கு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார துறை மாவட்ட இணை இயக்குனரின் அலுவலகம் முன்பு செவிலியர் சேவையின் முன்னோடி மங்கை பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவ படத்தின் திறப்பு விழா நடைபெற்றது. அந்த விழாவுக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் குருநாதன் தம்பையா தலைமை தாங்கினார்.
இந்நிலையில் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளரான கல்பனா என்பவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மாலை அணிவித்துயுள்ளார். இதனை அடுத்து அரசு மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள், செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் என ஒவ்வொருவராக கல்பனா பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின் மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தியுள்ளனர்.