Categories
தேசிய செய்திகள்

சுமார் 13,487 கோடி செலவில்… தொடங்கப்படவுள்ள புதிய திட்டங்கள்… முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்…!!

கர்நாடகாவில் சுமார் 13,487 கோடி செலவில் தொடங்கப்படவுள்ள 10 புதிய தொழில் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கும் உயர்மட்ட ஆலோசனை குழுவின் 56வது கூட்டம் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் தலைமையில் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 10 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஆக்ஸிஜன் உற்பத்தி, பெட்ரோலியம் பொருட்கள், இன்ஜினியரிங் உபகரணங்கள், ரசாயனம், சிமெண்ட் உள்ளிட்டவை தயாரிக்க முடியும்.

இதனையடுத்து பெங்களூரில் 4,042 கோடியும், பெங்களூர் புறநகரில் 3,425 கோடியும், மங்களூரில் 2,527 கோடியும்,  பல்லாரியில் 1,204 கோடியும், சிக்பள்ளாப்பூரில் 1,000 கோடியும், சாம்ராஜ்நகரில் 731 கோடியும், சித்ரதுர்கா 555 கோடியும் என மொத்தமாக 13,487 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் சுமார் 6,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |