Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

அறநிலைத்துறையின் உத்தரவு… பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு… அதிகாரிகளின் தீவிர முயற்சி…!!

அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறநிலைத்துறை அதிகாரிகளின் உத்தரவின் படி உணவு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குமாறு அறநிலைத்துறை தலைமை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் 500 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது. இம்மாவட்டத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வைத்து உணவு தயாரிக்கபட்டுஅந்த உணவானது  அறநிலைதுறை பணியாளர்கள் மூலமாக அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தினமும் 500 உணவு பொட்டலங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 500 நபர்களுக்கு உணவு தயார் செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் முத்துக்குமார், செயல் அலுவலர் செந்தில்குமார், வங்கடேசன், சண்முகம், பொன்மணி, தி.மு.க நகர செயலாளர் ராஜேந்திரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் கவெனிதா போன்றோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |