Categories
மாநில செய்திகள்

எல்லாரும் உதவுறாங்க… மகிழ்ச்சியா இருக்கு … எனர்ஜிடிக்காக பேசிய முதல்வர்….!!

தமிழகத்தில் பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்து பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின்.

இந்த திடீர் அவசர செலவினங்களுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமா நிதி வழங்குவேன் என்று நான் வேண்டுகோள் வைத்தேன். கருணை உள்ளத்தோடு பலரும் நிதிகளை கொண்டுவந்து வழங்கி வருகின்றார்கள். பலரும் நிதி திரட்டி வருகிறார்கள். அமெரிக்கவால் தமிழ் தொழில் முனைவோர் சங்கம், வட அமெரிக்காவின் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு, அமெரிக்க தமிழ் மருத்துவ சங்கம், கலிபோர்னியா தமிழ் அகாடமி போன்ற அமெரிக்காவில் உள்ள சில முக்கியத்துவம் வாய்ந்த அனைத்து தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து சரியான தருணத்தில் தமிழக மக்களுக்கு உதவுவதை பார்த்து பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். புலம்பெயர்ந்து சென்ற தமிழர்கள் தாய் தமிழகத்தை மறக்கவில்லை. மறக்க முடியாது என்ற அடையாளம் தான் இதுபோன்ற நிதி திரட்டும் நிகழ்வுகளாகும்.

தனக்காக மட்டும் வாழாமல் ஊருக்காக உலகத்துக்காக வாழும் உங்களின் உயர்ந்த உள்ளத்தோட வெளிப்பாடுதான் இந்த முன்னெடுப்பு ஆகும். மிகவும் சிக்கலான நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழ்நாட்டுக்கு மாபெரும் உதவியை செய்ய முன்வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்களை நாங்கள் மறக்க மாட்டோம் என்று நீங்கள் காட்டி இருக்கிறீர்கள். தமிழக மக்களாகிய நாங்களும் உங்களை மறக்கமாட்டோம். மருத்துவ நெருக்கடியும் நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களை காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களை தாங்களை முன்வந்து ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தமிழ் மக்களை காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்க வேண்டும். ஈகையும், இரக்கமும், கருணையும், பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கைகொடுக்கும் வகையில் நிதி வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு வழங்கப்படும் நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும். ஆக்சிஜன் பயன்படுத்தக்கூடிய படுக்கைகள், தடுப்பு மருந்துகள், தடுப்பு ஊசி போன்ற கொரோனா தடுப்புக்கு தேவையான பயன்பாட்டுக்களை உருவாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். இந்த விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அளிக்கும் தொகைக்கு வருமான வரிகளை விளக்கம் அளிக்கப்படும். உங்கள் நிதி கொரோனாவை முற்றிலும் ஒழிக்க உதவிகரமாக இருக்கும். மக்களின் உயிர்காக்க உதவிக்கரம் நீட்டுங்கள். வாழ்க தமிழகம்… மீல்க தமிழகம்.. என்று ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்

Categories

Tech |