தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
தற்போது தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆக்ஸிடன் உற்பத்தி செய்ய தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 30 சதவிகிதம் சிறப்பு மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் சிப்காட், சிட்கோ மூலம் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படும். ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் முதலீட்டாளர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லாமல் ஒற்றை சாளர முறையில் விரைந்து அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.