Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சில ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து…. மே 31 வரை நீடிக்கும்…. அறிவித்தது மதுரை கொட்ட நிர்வாகம்….!!

மே மாதம் 31-ஆம் தேதி வரை சில ரயில்கள் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்டம் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் மே மாதம் 31ஆம் தேதி வரை சில ரயில்களை ரத்து செய்துள்ளது. அந்த ரயில்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது: நாகர்கோவிலில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்-கோயம்புத்தூர் சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் கோயம்புத்தூர்-நாகர்கோவில் சிறப்பு ரயில் ஆகியவை நாளை முதல் மே 31ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் கோயம்புத்தூர்-மயிலாடுதுறை சிறப்பு ரயில், சென்னை சென்ட்ரல்-மங்களூரு சிறப்பு ரயில், கோயம்புத்தூர்-மங்களூர் சிறப்பு ரயில் ஆகியவை நாளை முதல் மே மாதம் 31-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |