ஊரடங்கு கட்டுப்பாட்டு விதிகளை மீறிய 3086 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்கபடுகிறது. மேலும் தேவை இன்றி யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சாலைகளில் தேவை என்று சுற்றித்திரிபவர்களுக்கும் அபராதம் விதித்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த கண்காணிப்பில் பேரில் மொத்தம் 3086 பேருக்கு அபராதம் விதித்து ரூபாய் 5 லட்சத்து 55 ஆயிரத்து 200 ரூபாய் அதிகாரிகளால் வசூல் செய்யப்பட்டுள்ளது.