ரவுடி குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சித்தம்பூண்டி பகுதியில் சுந்தரமூர்த்தி என்ற ரவுடி வசித்து வருகிறார். இவர் ஆனந்தபுரம் பகுதியில் உள்ள பொது சொத்துக்கு ஊறு விளைவித்தல், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தல், கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கிற்காக சுந்தரமூர்த்தி ஆனந்தபுரம் காவல்துறையினரால் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதால் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது