ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வசித்து வந்தவர் தனபாலன்-சலசா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். மேலும் காரை அகஸ்டின் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இவர்கள் வந்த கார் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது அதிகாலை 4 மணியளவில் ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே சலசா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் தனபாலன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து டிரைவர் மற்றும் குழந்தைகள் சிறிய காயங்களுடன் தப்பி உள்ளனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.