Categories
உலக செய்திகள்

“சீக்கிரம் வாங்க!”.. குரங்கு என் தோழியை குதறுகிறது.. நெஞ்சை பதை பதைக்க வைத்த சம்பவம்..!!

அமெரிக்காவில் 14 வருடங்களாக ஒரு பெண் வளர்த்த குரங்கு அவரது தோழியை ஆக்ரோஷமாக தாக்கி பாதி தின்ற சம்பவம் பதற வைத்துள்ளது. 

அமெரிக்காவில் Connecticut என்ற பகுதியில் வசிக்கும் பெண் Sandra Herold. இவர் Travis என்ற சிம்பன்ஸி குரங்கை பிறந்த 3 ஆம் நாளிலிருந்து 14 வருடங்களாக தன் குழந்தையை போல வளர்த்து வந்திருக்கிறார். இந்நிலையில் Sandraவின் வீட்டிற்கு அவரின் நெருங்கிய தோழி Charla வந்துள்ளார்.

அந்த குரங்கு அவருக்கு நல்ல நண்பனாம். ஆனால் வித்தியாசமாக தலை வாரியிருந்த Charla வழக்கம் போல் அதன் அருகில் வந்துள்ளார். ஆனால் அன்று திடீரென்று சிங்கத்தை விட மிக ஆக்ரோசமாக தாக்கிய அந்த குரங்கு, அவரது கண் இமைகளை பிடுங்கி, மூக்கை பரண்டி தலையில் உள்ள முடிகளை மண்டை ஓட்டிலிருந்து பிய்த்து, கண்களை பிடுங்கி தின்றதோடு, ஒரு கையையே மொத்தமாக கடித்து தின்றுகொண்டிருந்துள்ளது.

அடுத்த கையையும் கிழித்திருக்கிறது. இதனால் செய்வதறியாது நின்ற Sandra, Charla வை காப்பாற்றுவதற்கு தன் குரங்கை கத்தியால் குத்தி, அடித்தும் பார்த்துள்ளார். ஆனால் அவரை ஆத்திரத்துடன் முறைத்து பார்த்துள்ளது. இதனால் நடுங்கிய அவர் காவல்துறையினருக்கு தொடர்புகொண்டு, அவசரமாக வாருங்கள் என் தோழியை குரங்கு தின்று கொண்டிருக்கிறது உடனே வாருங்கள் அதை கொல்லுங்கள் என்று பதட்டமாக கூறியுள்ளார்.

இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நான்குமுறை குரங்கை நோக்கி சுட்டுள்ளனர். ஆனால் அப்போதும் குரங்கு வீட்டிற்குள் ஓடி தன் படுக்கையில் சென்று படுத்த பின்பே இறந்துள்ளது. அதன் பிறகு நிலைகுலைந்து கிடந்தவரை காவல்துறையினர் எடுத்து சென்றுள்ளார்கள்.

அதன் பிறகு சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு உடல் நலம் பாதித்து Sandra மரணமடைந்துள்ளார். ஆனால் Charla கண்கள் மற்றும் கைகளை இழந்து, முகமாற்று அறுவை சிகிச்சை செய்து, பிறரின் உதவியின்றி எதுவும் செய்யமுடியாமல், ஓவ்வொரு நாளும் பயத்துடன் வாழ்வதாக charla கூறியுள்ளார். ஆனால் குழந்தை போன்று இருந்த குரங்கு எதனால் இவ்வாறு மிருகத்தை விட மோசமாக நடந்து கொண்டது என்பது குழப்பமாகவே உள்ளது.

Categories

Tech |