நிறுவனத்திற்குள் திருட முயற்சித்த 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் கப்பலூர் தொழிற்பேட்டையில் புலிக்குத்தி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பணியில் இருக்கும் போது அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டி மகன் கண்ணன் மற்றும் மூக்கன் மகன் கண்ணன் ஆகிய இருவரும் சேர்ந்து நிறுவனத்திற்குள் புகுந்த திருட முயற்சித்துள்ளனர். இதனை கண்ட காவலாளி புலிக்குத்தி அவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர்கள் இருவரும் புலிக்குத்தியை சரமாரியாக அடித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து புலிகுத்தி திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.