Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வெளியூரிலிருந்து இறங்கிய ஆட்கள்…. கண்மாயில் மீன்பிடிக்க முயன்ற 24 பேர்…. விதிகளை மீறியதால் வழக்குபதிவு….!!

கண்மாயில் மீன் பிடிக்க முயற்சி செய்த 24 பேரையும் பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா காரணமாக முழுஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வெளியூரில் இருந்து அதிக அளவு ஆட்களை இறக்கி மதுரை மாவட்டம் திருவாதவூர் நல்லாங்குளம் கண்மாயில் மீன் பிடிக்க சிலர் முயன்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மீன்களை பிடிக்க 2 மினி வேனில் வந்தவர்களை வழிமறித்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும் கண்மாயின் மீன்பிடி குத்தகைகாரரான செல்வம் மற்றும் மினி வேனில் வந்த 23 பேர் மீது ஊரடங்கு தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2 மினி வேன்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |