பர்கூர் மலைப் பகுதியில் மே பிளவர் மரங்களில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் பர்கூர் மலைப் பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. இங்குள்ள மரங்கள் காலநிலைக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டுள்ளது.
அதன்படி மே மாதத்தை முன்னிட்டு பர்கூர் மலைப்பகுதியில் ரோட்டோரத்தில் இருபுறங்களிலும் உள்ள மே பிளவர் மரங்களில் அதிக அளவு பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மேலும் மரத்தில் இலைகள் தெரியாத அளவிற்கு சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்துக் குலுங்குவது கண்களைப் பறிக்கும் விதமாக இருக்கிறது.