நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
மேலும் புதிதாக பதவி ஏற்ற துணை ஆணையர் ககன் சிங் பேடி நாளை முதல் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். அவர் கூறியதை தொடர்ந்து தற்போது காவல்துறையினரும் ஊரடங்கு விதிகளை மீறி தேவையில்லாமல் வெளியில் வாகனங்களில் வருபவர்கள், நடனமாடுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.