Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தீவிரம் முழு ஊரடங்கு… அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் தீவிரம் ஒரு ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சென்னை ஆணையர் நாளை முதல் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழகம் முழுவதும் தளர்வுகள் குறைக்கப்பட்டு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கை தீவிரப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் அடுத்து ஆலோசனை நடைபெறும். கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |