இன்று இஸ்லாமியர்களின் பண்டிகையான ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதையடுத்து இன்று முதல் முழு ஊரடங்கு மேலும் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ரமலான் பண்டிகையை இஸ்லாமியர்கள் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் இந்த தருணத்தில் மதம் சார்ந்த விழாக்களை தவிர்த்து அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடித்து பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ வேண்டும் என்று தெரிவித்துள்ளது.