புதுக்கோட்டை மாவட்டத்தில் கிறிஸ்துவ ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த தங்க கிரீடத்தை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரத்தில் செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயம் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிரியார் ஆலயத்தை திறந்து பார்த்த போது கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க கிரீடத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பாதிரியார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் தங்க கிரீடத்தை திருடி சென்ற மர்ம நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.