தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. அனால் அதிமுக தோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தற்போது மே-24 வரை முழு ஊரடங்கை முதல்வர் அறிவித்தார்.
மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு ஆலோசனை கூட்டங்களையும், நடவடிக்கைகளையும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழகத்தை கொரோனா பாதிப்பில் இருந்து மீட்க திமுகவினர் களப்பணியாற்றிட வேண்டும். தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களின் பக்கம் உறுதியாக நிற்க வேண்டிய காலகட்டம் இது. ஒன்றிணைவோம் வா.. வென்றிடுவோம் வா… என தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.