மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சில தினங்களாக பெட்ரோல்-டீசல் விலை சில தினங்களாகவே அதிகரித்து வருகிறது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 0.25 காசுகள் அதிகரித்து ரூ.94.09க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.0.32காசுகள் அதிகரித்து ரூ.87.81க்கும் விற்பனையாகிறது. இந்நிலையில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், “எங்கள் பிரதமரே! நோயால், பசியால், பற்றாக்குறையால், இல்லாமையால், இயலாமையால், ஊரடங்கினால் வேலையின்மையால் மக்கள் அல்லல்படும் போது அள்ளித் தர வேண்டிய அரசு அவர்களிடம் இருந்து அபகரிக்கலாமா? 2020 மே பெட்ரோல் ரூ.69 டீசல் ரூ.62, 2021 மே பெட்ரோல் ரூ.93.84, டீசல் ரூ.87 இது விலை உயர்வு வரியால் மட்டுமே என விமர்சனம் தெரிவித்துள்ளார்.