Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேகமெடுத்து பரவும் கொரோனா… அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை… கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் மக்கள்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் முதியவர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவால் 245 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 66 வயது முதியவர், திண்டுக்கல்லை அடுத்த ஒபுளாபுரத்தை சேர்ந்த 65 வயது முதியவர், கே.டி.பாளையத்தை சேர்ந்த 51 வயது ஆண், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், ராஜக்காபட்டியை சேர்ந்த 53 வயது பெண், பழனியை சேர்ந்த 58 வயது ஆண், பாலசமுத்திரத்தை சேர்ந்த 57 வயது பெண் என மொத்தம் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து விட்டனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |