தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் செய்தியாளர் மணி என்பவர் கொரோனா தோற்றால் உயிரிழந்தார். இதையடுத்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. எனவே ஊடகத்துறை, முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள் என அனைவருமே தங்களுடைய பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுத்து எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.